ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு முக்கிய மேம்பாடுகளை வெளியிட்ட கூகுள் நிறுவனம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கூகுள் ஐ/ஓ (Google I/O) மாநாட்டிற்கு முன்னதாக நடத்தப்பட்ட “ஆண்ட்ராய்ட் ஷோ” நிகழ்வில், ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கான முக்கிய மேம்பாடுகளை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது படிவங்களை நிரப்புவது, ஒன்லைன் கொள்வனவு மற்றும் செயலிகளை நிர்வகிப்பது போன்ற பணிகளைத் தானாகவே மேற்கொள்ள உதவும்.

மேம்படுத்தப்பட்ட குரல் வழித் தட்டச்சு (Voice Typing), தனிப்பயனாக்கப்பட்ட விட்ஜெட்கள் மற்றும் சாதனங்களுக்கு இடையேயான தடையற்ற இணைப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஆண்ட்ராய்ட் ஒட்டோவில் 3D கூகுள் மேப்ஸ் வசதி மற்றும் ஜெமினி ஏஐ தொழில்நுட்பம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

கூகுள் குரோம் உலாவியில் ஏஐ வசதிகள், மேம்பட்ட கோப்பு பகிர்வு (File sharing) மற்றும் திரைப் பயன்பாட்டு நேரத்தைக் (Screen-time) கட்டுப்படுத்தும் புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த வசதிகள் அனைத்தும் மென்பொருள் அப்டேட் மூலம் இலவசமாக வழங்கப்படவுள்ளன.

இருப்பினும், மிக மேம்பட்ட சில ஏஐ அம்சங்கள் மட்டும் கூகுள் பிக்சல் மற்றும் சம்சுங் கெலக்ஸி போன்ற ப்ரீமியம் ரக தொலைபேசிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects