மட்டக்களப்பு தமிழ்ச் சங்கம், கதிரவன் கலைக்கழகம் மற்றும் SPAND அமைப்பு ஆகியன இணைந்து நடாத்திய கவிமகள் ஜெயவதியின் “தழும்பேறிய நிலம்” மற்றும் “எனது மனச் சிறகுகள்” ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு 17.05.2026 அன்று மட்டக்களப்பு தமிழ்ச் சங்க கட்டடத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வு சைவப் புரவலர் வி.ரஞ்சித் மூர்த்தியின் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வின் முதன்மை அதிதிகளாக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவன பணிப்பாளர் பேராசிரியர் புலோரன்ஸ் பாரதி கென்னடி, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சுகுணன், மட்டக்களப்பு உயர்தொழில்நுட்ப கல்லூரி பணிப்பாளர் செல்வரத்தினம் ஜெயபாலன், களுவாஞ்சிகுடி வலய கல்வி பணிப்பாளர் சிவானந்தம் ஸ்ரீதரன், பட்டிப்பளை உதவி பிரதேச செயலாளர் சூ.பார்த்திபன், ஓய்வு நிலை அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன், கதிரவன் கலைக்கழக தலைவர் இன்பராஜா ஆகியோருடன் கௌரவ, சிறப்பு விருந்தினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது நூல் வெளியிடப்பட்டதுடன் முதன்மை பிரதியை உதவும் கரங்கள் அமைப்பின் தலைவர் சதாசிவம் ஜெயராஜ் பெற்றுக் கொண்டதுடன் வருகை தந்த அதிகாரிகளுக்கும், நலன் விரும்பிகளுக்கும் நூல்கள் ஆசிரியரால் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன் வருகை தந்த அதிதிகளால் நூல் நயவுரை,சிறப்புரை என்பன வழங்கப்பட்டன.
மேலும் கவிமகள் ஜெயவதி மட்டக்களப்பு தமிழ்ச் சங்கம், கதிரவன் கலைக்கழகம் மற்றும் SPAND அமைப்பு ஆகியவையால் பொன்னாடை போர்த்தியும், வாழ்த்து மடல் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்.
இதே வேளை கலை நிகழ்வுகளை அரங்கேற்றிய மாணவர்கள் அதிதிகளால் கௌரவிக்கப்பட்டனர்.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு தமிழ்ச் சங்க உறுப்பினர்கள், கதிரவன் கலைக்கழக உறுப்பினர்கள் மற்றும் SPAND அமைப்பின் உறுப்பினர்கள் நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.















புகைப்பட உதவி – அந்தோணி லியோன் ராஜ்

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










