உலகளவில் குடும்பங்கள் குடியேறி வாழ்வதற்கு மிகவும் உகந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 4 வது இடத்தைப் பிடித்துள்ளது.
டிஜிட்டல் நிதிச் சேவை நிறுவனமான ‘Remitly’ தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நடத்திய உலகளாவிய ஆய்வின் மூலமே இந்த விபரம் வெளியாகியுள்ளது.
சுகாதாரத் தரம், வாழ்க்கைச் செலவு, வேலைவாய்ப்புகள் மற்றும் குடும்பங்களுக்கான உகந்த சூழல் உள்ளிட்ட 34 முக்கிய காரணிகளின் அடிப்படையில் 82 நாடுகள் ஒப்பிடப்பட்டு இந்தத் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.
இப்பட்டியலில் ஸ்பெயின், சீனா மற்றும் அமெரிக்கா (USA) ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இலங்கை 4 வது இடத்தை பெற்றுள்ளது.
இலங்கையின் சிறந்த கல்வி முறைமை மற்றும் மலிவான குழந்தை பராமரிப்புச் செலவுகள் (Childcare costs) காரணமாகவே இந்த உயர் இடம் கிடைத்துள்ளது.
மேலும், குடும்பங்களுக்கு அவசியமான சிறந்த பொதுப் போக்குவரத்துத் தொகுதி (Public transport) கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 5-வது இடத்தைப் பிடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










