கறுப்புத் தேயிலை ஏற்றுமதி கடந்த ஆண்டில் 5000 தொன்களாக வீழ்ச்சி யடைந்துள்ளதாக தேசிய தேயிலை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சமன் கீகனகே தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில் மொத்த தேயிலை ஏற்றுமதியானது 255,000 தொன் முதல் 265,000 தொன்களுக்கு இடைப்பட்டதாக இருந்துள்ளதுடன் இதனூடாக 1.25 – 1.35 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் கறுப்புத் தேயிலை ஏற்றுமதியானது 90 வீதமாக இருந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2025ம் ஆண்டில் சுமார் 235,000 – 245000 தொன் கறுப்புத் தேயிலையும் 9000 – 11000 தொன் பச்சைத் தேயிலையும் 6000 – 8000 தொன் கரையும் தேயிலையும் அத்துடன் 4000 – 6000 தொன் விசேட தேயிலையும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேயிலை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சமன் கீகனகே தெரிவித்துள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










