மத்திய மாகாண சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடைமுறைக்கு கொண்டுவரும் புதிய திட்டம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மத்திய மாகாணத்தில் உள்ள முக்கிய கலாசார மற்றும் பல்லுயிர் பெருக்கம் மிக்க இடங்களை கவரும் வகையில் புதிய சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருகிறது.

மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபேகோன் தலைமையில், ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் (UNDP) தேசிய திட்ட மேலாளர் அசோக அஜந்தா உள்ளிட்ட அதிகாரிகளின் பங்கேற்புடன் ஆளுநர் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் இது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மத்திய மாகாண சபையினால் அடையாளம் காணப்பட்டுள்ள இந்த சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் பணிகளை, ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (UNDP) மற்றும் சுற்றுலாத்துறை திணைக்களம் ஆகியன இணைந்து செயல்படுத்தவுள்ளன.

சுற்றுலாத் தலங்களாக மேம்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ள பகுதிகள்:

மினிப்பே (Minipe)

பன்வில (Panwila)

உடுதும்பர (Ududumbara)

மெததும்பர (Medadumbara)

தம்புள்ளை (Dambulla)

அம்பகமுவ (Ambagamuwa)

நோர்வூட் (Norwood)

லகுகல-பல்லேகம (Laggala-Pallegama)

மஸ்கெலியா (Maskeliya)

மத்திய மாகாணத்தின் மூன்று வலயங்களை உள்ளடக்கிய இந்தத் திட்டத்தின் மூலம் சுற்றுலாத்துறை மேலும் வலுப்பெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இந்த விளம்பரப் பணிகளில் உள்ளூராட்சி அமைப்புகளும் முக்கிய பங்காற்றவுள்ளன.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects