உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, நிலைபேண்தகு உணவு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் மண்புழு உரம் தயாரிக்கும் செயல்முறைப் பயிற்சியானது மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் நமசிவாயம் சத்தியானந்தி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட விவசாயிகள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
பயிற்சியின் வளவாளராக பொறியியலாளர் றிலா மர்சூக், மண்புழு உரம் தயாரிப்பின் முக்கியத்துவம், அதன் பயன்பாடுகள் மற்றும் தயாரிப்பு முறைகள் தொடர்பான செயல்முறை விளக்கங்களை வழங்கினார்.
இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் முகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரிப்பதற்கான உபகரணத் தொகுதிகளும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், ஆரோக்கியமான உணவு உற்பத்தியையும் உறுதிப்படுத்தும் இத்தகைய பயிற்சித் திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளன.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










