இலங்கைக்கான பங்களாதேஷ் மக்கள் குடியரசின் உயர்ஸ்தானிகர் அந்தாலிப் எலியாஸ் H.E. Andalib Elias, தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து நாடு திரும்புவதை முன்னிட்டு, 15.06.2026 அன்று அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை விடைபெறும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.
இச் சந்திப்பின்போது, இலங்கைக்கும் பங்களாதேஷ்க்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்துவதில் உயர்ஸ்தானிகர் அந்தாலிப் எலியாஸ் ஆற்றிய அர்ப்பணிப்பு மிக்க சேவைகளுக்கும் பங்களிப்புகளுக்கும் பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
அத்தோடு, இரு நாட்டு மாணவர்களின் நலனுக்காக கல்வித்துறையில் தொடர்ந்தும் ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் பரஸ்பர நலன் சார்ந்த ஒத்துழைப்பையும் மேலும் பலப்படுத்துவதற்கான இரு நாடுகளின் அர்ப்பணிப்பை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
இந்தச் சந்திப்பில் கொழும்பிலுள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் ஆலோசகர் திரு. முஹம்மது ஜன்னதுல் ஹபீப் Md. Jannatul Habib, பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி, மேலதிக செயலாளர் திருமதி சாகரிகா போகாவத்த, மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சின் அதிகாரிகள் ஆதியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
(பிரதமர் ஊடகப் பிரிவு)




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










