கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் காலாண்டுக்கான உள்ளக கணக்காய்வு குழு கூட்டம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட கணக்காய்வு அத்தியட்சகர் றொபட் அலோசியஸ், மாவட்ட பிரதம உள்ளக கணக்காய்வாளர் சசிகரன், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் உட்பட அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது, பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் ஏனைய வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும், கணக்காய்வில் உள்ள தெளிவின்மை குறித்த விடயங்கள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.







இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










