ஜூலை 1 முதல் வருடாந்திர பேருந்து கட்டணத் திருத்தம் குறித்து வெளியான செய்தி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

ஆண்டுதோறும் அமுல்படுத்தப்படும் பஸ் கட்டணத் திருத்தத்தை ஜூலை 1 ஆம் திகதி முதல் அமுல்படுத்தக் கோரி, தனியார் பேருந்து சங்கங்கள் தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

இக்கோரிக்கை 24.06.2026 அன்று எழுத்துப்பூர்வமாக கையளித்ததாக, இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

அதன்படி, அடுத்த 5 நாட்களுக்குள் கட்டணத் திருத்தம் தொடர்பாக தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவுடன் கலந்துரையாடல்களை நடத்த எதிர்பார்ப்பதாக கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

”ஆண்டுதோறும் அமுல்படுத்தப்படும் பஸ் கட்டணத் திருத்தம் 5 ஆம் திகதி செயல்படுத்தப்படும் என நாங்கள் முன்னதாக அறிவித்திருந்தோம்.

இந்த மாத இறுதியில் வரவிருக்கும் எரிபொருள் விலை மாற்றத்தை பரிசீலித்த பிறகு, எங்களின் அனைத்து சங்கங்களுடனும் கலந்துரையாடி, அவர்களின் ஒப்புதலைப் பெற்று, பஸ் கட்டணத்தை வழக்கம் போல் ஜூலை 1 ஆம் திகதி திருத்தியமைக்க நேற்று எழுத்துப்பூர்வ அறிவிப்பை வெளியிட முடிவு செய்தோம். மேலும், தேசிய போக்குவரத்து ஆணைக்குவுடனும் இந்த 5 நாட்களுக்குள் கலந்துரையாட முயற்சி செய்து வருகிறோம். நாங்கள் எங்கள் அனைத்து விலைகளையும் தெரிவித்துவிட்டோம்.

இருப்பினும், ஜூலை மாதத்தில் செய்யப்படும் திருத்தம் 15 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.”

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects