சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

அரச உத்தயோகஸ்தர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் 24.06.2026 ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற அமைச்சின் செயலாளரான ரி. அசோக பீரிஸ் மற்றும் ஏனைய உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற நீதிபதி கே. கே. ஏ. வி. சுவர்ணாதிபதி, என். பி. எம். ரணதுங்க, வைத்தியர் ஆர். டபிள்யூ. ஜயந்த, கலாநிதி ஜி. எம். முதித் சுஜீவ, பிரிகேடியர் (ஓய்வுபெற்ற) பி. ஜே. பெர்னாண்டோ, ஏ. எல். மொஹமட் முக்தார், எஸ். டி. பி. ரத்நாயக்க, ஏ. டபிள்யூ. லால் சந்திர வீரகோன், ஜி. ஏ. பி. பத்மநாத, கே. எஸ். லால் பெரேரா மற்றும் ஆணைக்குழுவின் செயலாளர் டி. எம். சி. நாலக திசாநாயக்க ஆகியோர் தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

அரச உத்தியோகஸ்தர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதை நோக்காகக் கொண்டு, 2026.06.22 ஆம் திகதியிட்ட 2494/05 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகை மூலம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகேயும் கலந்துகொண்டார்.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects