மத்திய அதிவேக வீதியின் கட்டுமானப் பணிகளை கலகெதர பகுதியில் நிறைவு செய்வது, எதிர்காலத்தில் அந்த அதிவேக வீதியை கன்னொருவை வரை நீடிக்கும் திட்டத்துடன்தான் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (09.07.2026) பாராளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்ன எழுப்பிய பல கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர், கண்டி நகரில் மேலும் பல வீதி அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அத்துடன், சேதமடைந்த கொழும்பு – கண்டி மலையக பிரதான புகையிரத பாதையின் கட்டுமானப் பணிகளை இந்த ஆண்டின் இறுதிக்குள் அல்லது 2027 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()









