இலங்கை கடற்படையின் புதிய தளபதிக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கை கடற்படையின் புதிய தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ அவர்களுக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு 08.07.2026 அன்று நடைபெற்றது.

கடற்படைத் தளபதி தனது பதவியைப் பொறுப்பேற்றதன் பின்னர் நடத்திய முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு இச்சந்திப்பு ஆகும்.

குறித்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, பாரம்பரியங்களுக்கு அமைவாக இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, இலங்கை கடற்படையின் 27ஆவது கடற்படைத் தளபதியாகப் பதவியேற்றுள்ள வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவுக்கு ஜனாதிபதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில், கடற்படைத் தளபதியினால் ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசு ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects