நாட்டிலுள்ள சகல கால்நடை பண்ணைகளையும் எதிர்வரும் ஜனவரி மாதம் பதிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது 290,592 கால்நடை பண்ணைகள் காணப்படுகின்ற நிலையில் அவற்றில் 58,137 பண்ணைகள் மாத்திரமே கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ள கால்நடை பண்ணைகளில் பெரும்பாலானவை நாள் ஒன்றுக்கு 100 லீற்றருக்கும் குறைவான பால் உற்பத்தியை மேற்கொள்ளும் பண்ணைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇