உடவளவ நீர்த்தேக்கத்தின் பிடவான பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக, அந்த நீர்த்தேக்கத்திற்கு மேலாக செல்லும் வீதி இன்று 15.12.2023 முதல் மூடப்படவுள்ளது.
எதிர்வரும் 22ஆம் திகதி வரையில், குறித்த வீதி மூடப்பட்டிருக்கும் என மகாவலி அதிகார சபை அறிவித்துள்ளது.
எதிர்வரும் 23ம் திகதி முதல் ஜனவரி மாதம் 6ஆம் திகதி வரையில் குறித்த வீதியின் ஒரு மருங்கு மாத்திரம் திறக்கப்படும் என அச் சபை குறிப்பிட்டுள்ளது.
இதனால் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு சாரதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇