“வீட்டுத்தோட்டம் முதல் பாடசாலை வரை ” எனும் தொனிப்பொருளிலான செயற்திட்ட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கான ஆர்.ஜதிஸ்குமார் மற்றும் வீ.நவநிதன், வலயக்கல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள், விடய ஆசிரியர்கள், உணவு வழங்கும் ஒப்பந்ததாரர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இச் செயற்திட்டமானது மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் உள்ள மூன்று பிரிவுகளில்முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன் பிரகாரம் பட்டிப்பளை தென்மேற்கு, மண்முனை மேற்கு, ஏறாவூர்பற்று மேற்கு போன்ற பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுகின்றது.
உலக உணவு திட்டத்தின் நிதி உதவியின் கீழ் பாடசாலை மாணவர்களின் உடல் உள ஆரோத்தியத்தை மேம்படுத்துவதற்காக சமைத்த சத்துணவு வழங்கபட்டு வருகின்றது.
இக் கலந்துரையாடலில் பாடசாலை மாணவர்களுக்கு சமைத்த உணவு வழங்கும் போது எதிர் நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பாக கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇