2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறை தொடர்பாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான முதலாம் கட்டம் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு நாளை (07.08.2026) ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.
முஸ்லிம் பாடசாலைகளுக்கு செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி நிறைவடைகிறது.
அனைத்துப் பாடசாலைகளுக்கும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதுடன், டிசம்பர் 4 ஆம் திகதி மூன்றாம் தவணை நிறைவடைகிறது.
இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டிற்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 09ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.
அத்தோடு, 2026 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை 2026 ஓகஸ்ட் 10 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 05 ஆம் திகதி வரை 2532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ள தென கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










