இலங்கையின் தேசிய தேயிலை ஏலத்தின் சராசரி விலை ஜூலை மாதத்தில் அதிகரிப்பு – இலங்கை தேயிலை சபை

இலங்கையின் தேசிய தேயிலை ஏலத்தின் சராசரி விலை ஜூலை மாதத்தில் அதிகரித்துள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜூலை மாதத்திற்கான தேசிய தேயிலை ஏல சராசரி விலை ஒரு கிலோகிராமுக்கு 1,176.10 ரூபாயாக பதிவாகியுள்ளது. இது ஜூன் மாத சராசரி விலையான 1,153.49 ரூபாயுடன் ஒப்பிடுகையில் 22.61 ரூபாய் அதிகரிப்பாகும்.

கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், உள்நாட்டு பெறுமதியில் தேயிலை விலை அதிகரித்துள்ள போதிலும், அமெரிக்க டொலர் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த உயரப்பகுதி (Low Grown) தேயிலை விலை அதிகரித்ததே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அந்த வகை தேயிலையின் ஒரு கிலோகிராமின் சராசரி விலை 1,293.06 ரூபாயாக அதிகரித்துள்ளது.

அதேவேளை, உயரப்பகுதி (High Grown) தேயிலை விலையும் அதிகரித்துள்ள நிலையில், நடுத்தர உயரப்பகுதி (Medium Grown) தேயிலை விலையில் சிறிய வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், அனைத்து வகையான தேயிலைகளும் அமெரிக்க டொலர் மதிப்பில் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects