திரப்பனையில் 1,300 குடும்பங்களுக்குப் புதிய நீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைப்பு!

திரப்பனை பிரதேச செயலகப் பிரிவில் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வந்த 1,300 குடும்பங்களுக்காக, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன தலைமையில் புதிய நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று 09.08.2026 அன்று மக்கள் பயன்பாட்டிற்காகக் கையளிக்கப்பட்டது.

திரப்பனை பிரதேச செயலக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த நீர் சுத்திகரிப்பு நிலையத்தைத் திறந்துவைத்த நிகழ்வே, இலங்கை இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்ற பின்னர் அவர் கலந்துகொண்ட முதலாவது சமூக நலன்புரித் திட்டமாகும்.

புதிய இராணுவத் தளபதியின் தனிப்பட்ட தொடர்பாடலின் அடிப்படையில், அமெரிக்காவில் வசிக்கும் நபர் ஒருவரின் 26.5 இலட்சம் ரூபாய் நிதியுதவியுடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அப்போதைய இலங்கை இராணுவத்தின் தலைமை அதிகாரியாகச் பணியாற்றிய காலத்தில், தற்போதைய இராணுவத் தளபதியின் ஒருங்கிணைப்பில் திரப்பனை பிரதேச மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, சுமார் 3 மாதங்களுக்கு முன்பு இராணுவ வீரர்களின் பங்களிப்புடன் இதன் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects