ஓகஸ்ட் மாதத்தின் முதல் 6 நாட்களில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை!

ஓகஸ்ட் மாதத்தின் முதல் 16 நாட்களில் 113,307 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா வளர்ச்சி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் , இக்காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து 25,355 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன், இது மொத்த வருகையில் 22% ஆகும்.

அத்துடன், இக்காலப்பகுதியில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து (UK) 12,738 பேரும், பிரான்ஸிலிருந்து 8,106 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

2026 ஜனவரி 01 முதல் ஓகஸ்ட் 16 வரையிலான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,456,725 ஆகப் பதிவாகியுள்ளது.

அவர்களில் இந்தியாவிலிருந்து 363,585 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 143,139 பேரும் வருகை தந்துள்ளதாக அவ்வாணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects