புதுப்பிக்கத்தக்க சக்தித் திட்டங்களுக்கான புதிய கொள்முதல் கட்டணங்கள் இன்று முதல் அமுல்!

புதிய  புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களை அடிப்படையாகக் கொண்ட மின் நிலையங்களிலிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கான விலைகளை அறிவிப்பதற்காக  இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, பயன்பாட்டு ஆணைக்குழு விதித்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு, இந்த பயன்பாட்டு கட்டண முறை இன்று (25.08.2026) முதல் அமுலுக்கு வரும் என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த கட்டண முறைக்கான செயல்முறை மற்றும் விலைகள் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பயன்பாட்டு ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மின் உற்பத்தியின் தன்மையைக் கருத்திற்கொண்டு மூன்று பிரிவுகளின் கீழ் புதிய கட்டண முறை வெளியிடப்பட்டுள்ளது. 

அந்தப் பிரிவுகள் பின்வருமாறு:

புனரமைப்பு மின் நிலையங்களுக்கான கட்டண முறை

மின் நுகர்வோருக்கான கட்டண முறை

மின்கல சேமிப்பு அமைப்புடன் கூடிய புனரமைப்பு மின் நிலையங்களுக்கான கட்டண முறை

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects