வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக புத்தளம் வரையான மற்றும் அம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

இதன்படி, காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக புத்தளம் வரையான மற்றும் அம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கரையை அண்டிய கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், அப்பகுதிகளில் கடல் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். 

புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கரையை அண்டிய கடற்பகுதிகளில் கடல் அலைகள் சுமார் 2.0 – 2.5 மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன. 

எனவே, கடற்றொழில் மற்றும் கடற்படைச் சமூகத்தினர் இது குறித்து அவதானத்துடன் செயல்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

(வளிமண்டலவியல் திணைக்களம்)

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects