கொழும்பில் மேலும் 121 மெட்ரோ பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை – போக்குவரத்து அமைச்சர்

கொழும்பு உட்பட சனநெரிசல் அதிகமுள்ள பகுதிகளில் மெட்ரோ பேருந்து சேவையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய மேலும் 121 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்து.

10 மெட்ரோபேருந்துகளுடன் ஆரம்பமான இந்த திட்டத்தின் ஊடாக பயணிகள் பேருந்து சேவையில் பாரிய முன்னேற்றகரமான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதுடன் அதனை தொடர்ந்தும் உத்தேச திட்டமாக மாத்திரம் கவனத்திற்கொள்ள முடியாதென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக அடுத்த வருடம் முதல் காலி, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலும் மெட்ரோ பேருந்து சேவையை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கென அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கொழும்பு மெட்ரோ பேருந்து திட்டத்திற்கென 240 பேருந்து தரிப்பிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் குறித்த அனைத்து தரிப்பிடங்களிலும் செயன்முறையை இலகுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் பயணிகள் தமது மோட்டார் வாகனம் அல்லது மோட்டார் சைக்கிள்களை அங்கு நிறுத்தி வைத்துவிட்டு மெட்ரோ பேருந்துகள் ஊடாக தமது பயணத்தை மேற்கொள்வதற்கான வசதிகள் கிடைக்கப்பெறும்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects