வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை!

இலங்கையில் இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 204 காட்டுயானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த உயிரிழப்புகள் ஜனவரி 1 ஆம் திகதி முதல் இம் மாதம் 14 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ளன.

குறிப்பாக , 33 யானைகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதுடன், 26 யானைகள் சட்டவிரோத மின்சார வேலிகள் அல்லது மின்கம்பிகளில் சிக்கி உயிரிழந்துள்ளன.

இதுதவிர, வெடிபொருள் கலந்த உணவை உட்கொண்டதால் 26 யானைகளும், விஷம் காரணமாக 4 யானைகளும் உயிரிழந்துள்ளன.

இதேவேளை, புகையிரத விபத்துகளில் 2 யானைகளும், வீதி விபத்துகளில் 4 யானைகளும் உயிரிழந்துள்ளன.

விவசாயக் கிணறுகளில் தவறி விழுந்ததில் 7 யானைகளும், நீரில் மூழ்கியதில் மேலும் 7 யானைகளும் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects