பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் பகுதிகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையிலும், முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை வரையிலும் மற்றும் அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பிரதேசங்களுக்கு இது செல்லுபடியாகும்.

அதற்கமைய, கரையோரத்திற்கு அப்பாலுள்ள கடற்பிரதேசங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும் என்பதோடு, அக்கடற்பிரதேசங்கள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையிலான கரையோரத்திற்கு அப்பாலுள்ள கடற்பிரதேசங்களில் கடல் அலையின் உயரமானது சுமார் 2.0 – 3.0 மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, கடற்தொழில் மற்றும் கடற்படை சமூகத்தினர் இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.

(வளிமண்டலவியல் திணைக்களம்)

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects