புகையிரதத் திணைக்களத்தின் 24 தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த மாதம் 17 மற்றும் 18 ஆகிய இரு தினங்களில் 48 மணி நேர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன.
புகையிரத பொது முகாமையாளரின் தன்னிச்சையான நிர்வாகம் காரணமாக புகையிரத சேவை நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாகவும், இதனால் பயணிகள் தொடர்ச்சியாக அசெளகரியங்களுக்கு உள்ளாவதாகவும் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த நிலைமை தொடர்பில் குரல் எழுப்பும் தொழிற்சங்க அதிகாரிகளை ஒடுக்குவதற்கு எதிராகவும் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதற்கமைய, புகையிரதத் திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 24 தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த 48 மணி நேர தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்குவதற்குத் தீர்மானித்துள்ளன.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








