பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பம் உள்ளதாக முன் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 

இந்த அறிவித்தல் இன்று (14.09.2026) மு.ப. 10.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், இன்றிரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் மின்னல் தாக்கங்களினால் விபத்துக்கள் ஏற்படுவதற்கான அதிக ஆபத்து நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறிப்பிட்ட பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். 

எனவே மின்னல் மற்றும் காற்றினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

(வளிமண்டலவியல் திணைக்களம்)

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects