நாட்டின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலையினால் தொடரும் மழையுடான வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலாளர் பிரிவிற்கு இன்று (06.10.2026) இரண்டாம் கட்ட மண்சரிவு அனர்த்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டித்வா புயலின் போது அதிக அனர்த்தங்களை எதிர்நோக்கிய பகுதியாக பசறை காணப்பட்டது.
விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அனர்த்த எச்சரிக்கையைக் கருத்திற் கொண்டு பொதுமக்கள் மழைவீழ்ச்சி பதிவாகும் போது தமது குடியிருப்பு பகுதிகள் குறித்து அவதானமாக இருக்குமாறும், அனர்த்த எச்சரிக்கைகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும், அனர்த்த நிலைமைகள் ஏற்படும் போது பாதுகாப்பாக தங்கக் கூடிய இடங்களை அறிந்து வைத்திருப்பதுடன் அவசர அனர்த்த நிலைமைகளின் எடுத்துச் செல்ல தேவையானப் பொருட்களுடன் ஒரு பையை தயார் செய்து வைத்துக் கொள்ளுமாறு பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பதுளை மாவட்டத்தில் மாலை வேளையில் கடும் மழை தொடர்வதால் அனர்த்தங்கள் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









