மட்டக்களப்பு மாவட்டத்தில் 100 பயனாளிகளுக்கு வீட்டு உரித்துச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு 05.10.2026 அன்று பழைய மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு கலந்துகொண்டு இவ்வுரித்துச் சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்டத்தில் உள்ள 13 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு வீட்டு உரித்துச் சான்றிதழ்கள் கையளிக்கப்பட்டது.
வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் மூலம் நடப்பாண்டில் மாவட்டத்தில் 521 வீடுகள் நிர்மாணிப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டத்தின் கீழ் கட்டுமான பணிகளை நிறைவு செய்த பயனாளிகளுக்கு இவ்வாறு உரித்துச் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கி.சுபாஸ்கரன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்கள், விடயப் பொறுப்பான உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.




















இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









