பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு முன்னெச்சரிக்கை!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களின் பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு முன்னெச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது.

இந்த அறிவித்தல் 14.10.2026 அன்று மாலை 4:00 மணி முதல் இன்று (15.10.2026) மாலை 4:00 மணி வரையிலான 24 மணி நேரத்திற்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை மட்டம் 2 – அதவதானம் (செம்மஞ்சள்)

நுவரெலியா மாவட்டத்தில் – மதுரட்ட, வலப்பனை, ஹங்குரன்கெத்த மற்றும் நில்தண்டஹின்ன

இரத்தினபுரி மாவட்டத்தில் – பலங்கொடை மற்றும் கொாலொன்ன.

எச்சரிக்கை மட்டம் 1 – விழிப்புடன் (மஞ்சள்)

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் – கட்டுவான மற்றும் வலஸ்முல்ல.

களுத்துறை மாவட்டத்தில் – பாலிந்தநுவர, வலல்லாவிட்ட மற்றும் புளத்சிங்ஹல.

கண்டி மாவட்டத்தில் – தும்பனே மற்றும் ஹதரலியத்த.

கேகாலை மாவட்டத்தில் – கேகாலை, ரம்புக்கனை, தெஹிஓவிட்ட, புலத்கொஹுபிட்டிய, மாவனெல்ல, யட்டியாந்தோட்டை, வரகாப்பொல, ருவன்வெல்ல மற்றும் அரநாயக்க.

மாத்தளை மாவட்டத்தில் – அம்பன்கங்க கோரளை, ரத்தோட்டை மற்றும் மாத்தளை.

மாத்தறை மாவட்டத்தில் – முலட்டியன, அத்துரலிய மற்றும் பஸ்கொட.

இரத்தினபுரி மாவட்டத்தில் – களவானை, வெலிகேபொல, அயகம, எஹெலியகொட, நிவித்திகலை, இரத்தினபுரி, இம்புல்பே, குருவிட்ட மற்றும் எலபாத.

பலத்த மழை காரணமாக மலைப்பாங்கான மற்றும் சரிவான பகுதிகளில் வாழும் மக்கள் மண்சரிவு அபாயங்கள் குறித்து தீவிர அவதானத்துடன் இருக்குமாறும், அவசர காலத்தில் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லத் தயாராக இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects