பேராதனை ரணபிம ரோயல் கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு!

பேராதனை ரணபிம ரோயல் கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு, பிரதி குழுக்களின் தவிசாளர் கௌரவ ஹேமாலி வீரசேகரவின் தலைமையில், ஜனாதிபதி செயலகத்தின் பழைய பாராளுமன்ற சபை மண்டபத்தில் 14.10.2026 அன்று திகதி நடைபெற்றது.

பேராதனை ரணபிம கல்லூரி மாணவர்களுக்கு பாராளுமன்ற நடைமுறைகள் தொடர்பில் நடைமுறை அனுபவங்களை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கைப் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் ஆகியன கல்லூரியுடன் இணைந்து இந்நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

இங்கு உரையாற்றிய பிரதி குழுக்களின் தவிசாளர் கௌரவ ஹேமாலி வீரசேகர , மாணவர் பாராளுமன்ற நிகழ்ச்சித்திட்டங்கள் எதிர்காலத் தலைவர்களை உருவாக்குவதற்கான சிறந்த தளமாக அமைகின்றன எனத் தெரிவித்தார். தலைமைத்துவம் என்பது ஓர் அலங்காரம் அல்ல என்றும், பிறரின் நலனுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு கருவி என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் எதிர்காலத்தில் சிறந்ததொரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்குமான முழுமையான பொறுப்பு இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் உரியது எனத் தெரிவித்த அவர், பாரம்பரியமான சிந்தனைச் சட்டகங்களுக்கு அப்பால் சிந்திப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

இலங்கைப் பாராளுமன்றத்தின் மனிதவள அபிவிருத்திப் பிரிவின் பிரதானியும் நிர்வாக உதவிப் பணிப்பாளருமான சூலா ஹேரத் அவர்கள், பாராளுமன்றம் மற்றும் சட்டவாக்கச் செயற்பாடுகள் தொடர்பில் மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.

பேராதனை ரணபிம கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வை ஆரம்பித்து, சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையினரும் ஏனைய உறுப்பினர்களும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். பின்னர், மாணவர் பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அமைச்சரும் தமது அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசித்துள்ள திட்டங்கள் தொடர்பில் சபைக்கு விளக்கமளித்தனர்.

இதன்போது, மாணவர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவர்களுக்கான சான்றிதழ்களும் அதிதிகளால் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சித்திட்டத்தின் நிறைவில் , பேராதனை ரணபிம கல்லூரியின் அதிபர் எம். எம். பெரேரா அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். நாட்டின் சிறுவர்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு இலங்கைப் பாராளுமன்றத்தினால் முன்னெடுக்கப்படும் இவ்வாறான நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பில் அவர் தனது பாராட்டுகளையும் தெரிவித்தார்.

இந் நிகழ்ச்சியில், ஜனாதிபதியின் மக்கள் தொடர்புப் பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சுபாஷ் ரோஷன், ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் லெப்டினன்ட் கேணல் நதீக தங்கொல்ல உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects