உலகில் முதன்முறையாக, பாடசாலை மாணவிகளால் எழுதப்பட்ட 500 மின் நூல்கள் 24.12.2023 அன்று கண்டி மகாமாயா பெண்கள் பாடசாலையில் ஒரே நாளில் இணையத்தில் வெளியிடப்பட்டன.
கண்டி மகாமாயா பெண்கள் பாடசாலையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த கல்விசார் புத்தகம் எழுதும் நிகழ்ச்சிக்காக நாட்டின் தொலைதூர பிரதேசங்களில் இருந்தும் பாடசாலை மாணவர்களும் புத்தகங்களை எழுதியமை விசேட அம்சமாகும்.
இந்த 500 புத்தகங்களை முதலாம் ஆண்டு முதல் 13 ஆம் ஆண்டு வரை படிக்கும் சுமார் 400 மாணவர்கள் எழுதியுள்ளனர். கண்டி மகாமாயா கல்லூரியின் முன்னாள் ஆசிரியை எச்.எம்.செனவிரத்னவின் வழிகாட்டலின் கீழ் பாடசாலை மாணவர்கள் இந்தப் புத்தகங்களை எழுதத் தொடங்கியுள்ளனர். குறித்த ஆசிரியை சுமார் 60,000 புத்தகங்களை எழுதவும் வெளியிடவும் மாணவர்களுக்கு உதவியுள்ளார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇