ஊவா மாகாணத்திற்கும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கும் கடும் மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவித்தலானது இன்று (29.10.2026) 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட துடன் இன்று இரவு 11.00 மணி வரை இது செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம், குறித்த பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் நிலவுவதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் அசம்பாவிதங்களைக் குறைத்துக் கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








