கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் 2026ஆம் ஆண்டுக்கான இளங்கலைஞர் விருதை ஆற்றுகைக் கலைப் பிரிவில் பெற்றுக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பில் 28.10.2026 அன்று நடைபெற்ற ‘கிழக்கு மாகாண இலக்கிய விருது வழங்கும் விழா – 2026’ நிகழ்வின்போது அவருக்கு விருதுச் சின்னம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டதுடன், பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டார்.
பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆற்றுகைக் கலைத் துறையில் இவ்விருதுக்குத் தெரிவான அஸ்மின், இலங்கைத் தமிழ் இலக்கியத் துறையில் கவிஞராகவும் பாடலாசிரியராகவும் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றார்.
அத்துடன், தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்களிலும் பாடலாசிரியராகப் பங்களித்து வரும் இவருக்கு கிடைத்துள்ள இந்த விருது, அவரது கலை மற்றும் இலக்கியப் பயணத்திற்கான மற்றுமொரு மாகாண மட்ட அங்கீகாரமாக அமைந்துள்ளது.




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()










