உற்சாகமாக அதிகாலையில் எழுந்திருப்பது எப்படி?
ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை உங்கள் அன்றாட வாழ்க்கையில் இணைத்துக் கொள்வதன் மூலம் அதிகாலையில் உற்சாகமாக எழுந்திருக்க முடியும்.
சீக்கிரம் எழுந்திருக்கவும், உற்சாகமாக உணரவும் உதவும் சில குறிப்புகளை காண்போம் வாருங்கள்:
ஒரு தூக்க அட்டவணையை அமைத்துக்கொள்ளுங்கள்:
தினமும் ஒரே நேரத்தில் படுக்கைக்கு செல்லுங்கள் காலையில் ஒரே நேரத்தில் எழுந்திருங்கள். உதாரணத்திற்கு 10 மணிக்கு இன்று உறங்குகிறோம் என்றால் தினமும் 10 மணிக்கு உறங்க செல்லுங்கள். காலையில் 6 மணிக்கு எழுந்திருக்கிறீர்கள் என்றால் தினமும் காலை 6 மணிக்கு எழுந்திருங்கள்.
அதை அனைத்து நாட்களிலும் பின்பற்றுங்கள், வார இறுதி நாட்களில் பின் பற்றுங்கள், அட ‘இன்னைக்கு லீவ் தான இரவு ஒரு படத்தை பாப்போம் காலையில மெதுவா எந்திரிப்போம்’ என்றில்லாமல் ஒரு நிலையான நேரத்தை நீங்கள் பின்பற்றுங்கள். நிலைத்தன்மை உங்கள் உடலின் உள் கடிகாரத்தை ஒழுங்குபடுத்த உதவுகிறது, இது புத்துணர்ச்சியுடன் எழுந்திருப்பதை எளிதாக்குகிறது.
ஒரு பழக்கத்தை உருவாக்குங்கள்:
இது ஓய்வெடுக்கும் நேரம் என்பதை உங்கள் உடலுக்கு உணர்த்தும் வகையில் ஒரு அமைதியான உறக்க நேர பழக்கத்தை உருவாக்குங்கள். புத்தகம் வாசித்தல், வெந்நீரில் குளித்தால், உங்கள் உடலை தளர்வு நிலைக்கு கொண்டு செல்லும் நுட்பங்களை முயற்சி செய்யுங்கள். ஆழ்ந்த சுவாச பயிற்சி அல்லது தியானம் செய்யுங்கள் இது உங்கள் உடலை தளர்வு படுத்து நல்ல உறக்கத்தை கொடுக்கும்.
நீங்கள் உறங்க செல்லும் சிறிது நேரத்திற்கு முன்பு உங்கள் அறையில் உள்ள விளக்குகளை அனைத்து விடுங்கள், உங்கள் படுக்கையறையை இருட்டாகவும், அமைதியாகவும், குளிர்ச்சியாகவும் வைத்துக்கொள்வது தூங்குவதற்கு உகந்ததாக இருக்கும்.
திரை நேரத்தை குறைத்துக் கொள்ளுங்கள்:
ஸ்மார்ட்ஃபோன்கள், டேப் மற்றும் கணினிகள் போன்ற மின்னணு சாதனங்களை படுக்கைக்கு செல்லும் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே தவிர்த்துவிடுங்கள். திரைகள் மூலம் வெளிப்படும் நீல ஒளி உங்கள் உடலின் இயற்கையான தூக்கம் மற்றும் விழிப்பு சுழற்சியில் தலையிடும் மற்றும் தூங்குவதை கடினமாக்கும்.
இரவு உணவின் மீது கவனம் செலுத்துங்கள்:
கோபி, டீ போன்றவைகளைத் தவிர்க்கவும் மற்றும் அதிக அளவு உணவுகளை உறங்கும் நேரத்திற்கு முன் எடுக்காதீர்கள், அவை ஜீரணிக்க மிகுந்த நேரம் எடுத்துக்கொள்ளும் அது உங்கள் தூக்கத்தை சீர்குலைத்து, காலையில் புத்துணர்ச்சியுடன் எழுந்திருப்பதை கடினமாக்கும்.
உடற்பயிற்சியும் தண்ணீரும்:
தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள், உடற்பயிற்சி உங்கள் தூக்கத்தை மேம்படுத்துவதோடு சுறுசுறுப்புடன் எழுந்திருப்பதை எளிதாக்குகிறது. ஆனால் நீங்கள் உறங்கும் நேரம் நெருங்கி வரும்போது தீவிரமான உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கவும்.
அதேபோல் போதுமான அளவு தண்ணீர் பருகுங்கள், அது உடல் வெப்பத்தில் இருந்து உங்களை பாதுகாக்கும். ஆனால் இரவு உறங்க செல்லும் முன் அதிக அளவு தண்ணீர் குடிப்பதை தவிர்த்து விடுங்கள் காரணம் இது உங்கள் தூக்கத்திற்கு நடுவில் உங்களை நிச்சயம் எழுப்பும், உங்கள் தூக்கத்திற்கு இடையூறு செய்யும்.
உங்கள் உடல் சொல்வதை கேளுங்கள்:
உங்கள் உடலின் சமிக்கைகளுக்கு கவனம் செலுத்துங்கள் மற்றும் அதற்கேற்ப உங்கள் தூக்க பழக்கத்தை சரி செய்யுங்கள். நீங்கள் அணைத்து நுட்பங்களையும் பயன்படுத்தி அதிகாலையில் எழுந்திருக்க முயற்சி செய்த போதிலும் தொடர்ந்து சோர்வாக உணர்கிறீர்கள் என்றால். நீங்கள் உங்கள் அன்றாட செயல்கள் மறுபரிசீலனை செய்வது மிகவும் அவசியம். உங்களால் அதை கண்டறிய முடியவில்லை என்றால் நிச்சயம் நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.
இந்த உத்திகளை செயல்படுத்துவதன் மூலம், உங்கள் தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுப்பதன் மூலம், உங்களால் அதிகாலையில் புத்துணர்ச்சியுடனும், உற்சாகத்துடன் எழுந்திருக்க முடியும். முயற்சி செய்து பாருங்கள்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇