செயற்கை நுண்ணறிவு முதலீடுகளால் கூகுளின் சந்தை மதிப்பில் 500 பில்லியன் டொலருக்கும் அதிகமாக வீழ்ச்சி – சர்வதேச ஊடகங்கள்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் மேற்கொள்ளப்படும் பாரிய முதலீடுகள் மற்றும் அதன் காரணமாக பிரதான வருமான வழிகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த முதலீட்டாளர்களின் கவலைகளால், கூகுளின் தாய் நிறுவனமான அல்பபெட்டின் (Alphabet) சந்தை மதிப்பு 500 பில்லியன் டொலருக்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டின் இறுதிக் காலாண்டுக்கான நிதி அறிக்கைகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, கூகுளின் பங்குகளின் பெறுமதி சுமார் 13 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து, கடந்த ஆறு மாதங்களில் இல்லாத குறைந்த மட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகின்றது.

கூகுளின் பிரதான தேடுபொறியில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சுருக்கத் தகவல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், விளம்பர வருமானம் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சமும் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அமேசான் (Amazon) மற்றும் மைக்ரோசொப்ட் (Microsoft) ஆகிய தொழில்நுட்ப நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவுத் துறையில் தமது போட்டித்தன்மையைத் தக்கவைத்துக்கொள்வதற்காகப் பெருமளவில் முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றன.

அதன்படி, Alphabet நிறுவனத்தின் மொத்த வருமானம் 25 சதவீதத்தால் அதிகரித்து 127.6 பில்லியன் டொலராகப் பதிவாகியுள்ளது. எனினும், செயற்கை நுண்ணறிவுத் துறைக்கான அதிகளவிலான செலவினங்கள் காரணமாக 9 பில்லியன் டொலருக்கும் அதிகமான எதிர்மறையான பணப்புழக்கம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் நிறுவனத்தின் விற்பனை 11 சதவீதத்தால் அதிகரித்து 201 பில்லியன் டொலரை எட்டியுள்ளது. இருப்பினும், 42 பில்லியன் டொலர் எதிர்மறையான பணப்புழக்கம் பதிவானதைத் தொடர்ந்து, அதன் பங்குகளின் பெறுமதி 6 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதேவேளை, மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் வருமானம் 19 சதவீதத்தால் அதிகரித்து 92.3 பில்லியன் டொலராகப் பதிவாகியுள்ளது. செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு 500 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவும் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மையால் பங்குகளின் பெறுமதி சுமார் ஒரு சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

இவ்வாறான நிலையில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்காகத் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெருமளவிலான நிதியைச் செலவிட்டு வருகின்ற போதிலும், அந்த முதலீடுகள் குறுகிய காலத்தில் எதிர்பார்த்த இலாபத்தைத் தருமா என்பது குறித்த கேள்விகள் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளதாகப் பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அத்துடன், புதிய தொழில்நுட்பத்திற்கான முதலீடுகள் நிறுவனங்களின் ஏற்கனவே உள்ள பிரதான வணிக நடவடிக்கைகள் மற்றும் வருமான வழிகளில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்தும் முதலீட்டாளர்கள் அவதானம் செலுத்தி வருகின்றனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects