முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு குறித்த பயிற்சியை இலவசமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை!

இலங்கையில் அடையாளங் காணப்பட்டுள்ள சுமார் 35,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆரம்பப் பிள்ளைப்பருவக் கல்விக்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு குறித்த பயிற்சியை இலவசமாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எந்தவொரு முன்பள்ளி ஆசிரியரும் விடுபடாமல் இப் பயிற்சியை வழங்குவதே அரசாங்கத்தின் இலக்காகும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்ஷன தெரிவித்தார்.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு ஆகியன இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.

இதற்காக தேசிய கல்வியியல் நிறுவனம் மற்றும் ஆரம்பப் பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் ஆகியவற்றின் பங்களிப்பும் பெறப்படுகின்றது.

தேசிய பயிற்சி முறையின் கீழ் பல கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம், தேசிய மட்டத்திலான 108 முதன்மைப் பயிற்சியாளர்களையும், மாகாண மட்டத்திலான 556 பயிற்சியாளர்களையும் தயார்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரு முன்பள்ளி ஆசிரியருக்கு 10 நாட்கள் பயிற்சி காலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போது எட்டு மாகாணங்களில் பயிற்சி திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சப்ரகமுவ மாகாணத்திற்கான பயிற்சி திட்டம் நவம்பர் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

சிறப்புத் தேவைகளைக் கொண்ட பிள்ளைகளின் கல்வித் தேவைகள் குறித்தும் இத்திட்டத்தின் கீழ் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

முன்பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்துதல், முறைசார்ந்த பாடத்திட்டமொன்றை அறிமுகப்படுத்துதல் மற்றும் ஆசிரியர்களின் தொழில்சார் திறன்களை மேம்படுத்துதல் ஆகியன இத்தேசிய திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும் என பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்ஷன மேலும் தெரிவித்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects