இலங்கை கடற்படையின் கப்பல் பாதுகாப்பு குழுக்கள் (Onboard Security Team – OBST) தொடர்பான நடவடிக்கை மற்றும் நிதி முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதற்கான விஷேட கூட்டம், அண்மையில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
குறித்த கூட்டம் பாதுகாப்புத் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் இடம்பெற்றது
இக் கூட்டத்தில் காலி, பெட்டிகலவத்த ஆயுதக் களஞ்சிய வளாகத்திற்கு (Pettigalawatta Armoury Complex) அண்மையில் பாதுகாப்புத் பிரதி அமைச்சர் மேற்கொண்ட ஆய்வின் போது கண்டறியப்பட்ட விடயங்கள் மற்றும் எழுப்பப்பட்ட கேள்விகள் குறித்து முக்கியமாக கலந்துரையாடப்பட்டது.
வணிகக் கப்பல்களில் பணியாற்றும் வெளிநாட்டு தனியார் கடல்சார் பாதுகாப்பு கம்பனிகளுக்கு (Private Maritime Security Companies – PMSCs) சொந்தமான ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களைச் சேமித்து வைக்கும் இடமாக இந்த வளாகம் செயல்படுகிறது இதற்கான சேவையை இலங்கை கடற்படை வழங்குகிறது.
ஆய்வின் போது கண்டறியப்பட்ட சிக்கல்கள், அவற்றைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகள், கப்பல் பாதுகாப்பு குழுக்களின் (OBST) நடவடிக்கை மற்றும் நிதி முன்னேற்றம், மற்றும் வருவாயை அதிகரிப்பதற்கான வழிகள் போன்றவை இக்கூட்டத்தின் போது விரிவாக ஆராயப்பட்டன.
இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து தடையின்றியும், திறமையாகவும், பயனுள்ள வகையிலும் முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்யுமாறு பிரதி அமைச்சர் உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.
மேலும், அனைத்து நடவடிக்கைகளிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலைப் பேணுவதுடன், முறையான நடவடிக்கை மற்றும் நிதி நிர்வாகத்தை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில் சட்ட விவகாரங்களுக்கான ஜனாதிபதி ஆலோசகரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஜே. எம். விஜயபண்டார, பாதுகாப்புச் செயலாளர், கடற்படைத் தளபதி, மேலதிக செயலாளர் (சிவில் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி), ‘ரக்னா அரக்ஷ லங்கா’ (Rakna Araksha Lanka) நிறுவனத்தின் தலைவர், பாதுகாப்பு அமைச்சு, இலங்கை கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகள், மற்றும் ‘ரக்ன அரக்ஷ லங்கா’ நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








