மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜே.எஸ். அருள்ராஜின் வழிகாட்டல் மற்றும் தலைமைத்துவத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்ட செயலகம் 2025/2026ஆம் ஆண்டிற்கான தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் விழாவில் மூன்றாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், மாவட்ட செயலகம் சார்பில் இந்த அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்பட்டது.
பொதுச் சேவையின் உற்பத்தித்திறன் மற்றும் சேவைத் தரத்தை மேம்படுத்துவதற்காக மாவட்ட செயலகப் பணியாளர்கள் மற்றும் உற்பத்தித்திறன் அதிகாரிகள் மேற்கொண்ட அர்ப்பணிப்பான பணிகள், கூட்டு முயற்சி மற்றும் ஈடுபாடே இவ்வெற்றிக்குக் காரணமாக அமைந்துள்ளன.
பொதுமக்களுக்கு விரைவானதும் தரமானதுமான சேவைகளை வழங்கி, அரச நிர்வாகத்தின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளுக்குக் கிடைத்த உயரிய அங்கீகாரமாக இந்த விருது அமைந்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








