மட்டக்களப்பு மாவட்ட சாசன பாதுகாப்பு சபையின் வருடாந்த கூட்டமானது, மட்டக்களப்பு மாவட்ட சாசன பாதுகாப்பு சபைத் தலைவர் வணக்கத்திற்குரிய தம்பிடிய ஞானாநந்த தேரரின் தலைமையில் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 10.11.2026 அன்று நடைபெற்றது.
மாவட்ட சாசன பாதுகாப்பு சபையின் அழைப்பின் பெயரில் வருகை தந்திருந்த அகில இலங்கை சாசன பாதுகாப்பு சபையின் செயலாளர் வணக்கத்திற்குரிய முகுனுவெல அனுருத்த தேரர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜின் பங்குபற்றுதலுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன் போது மாவட்டத்தில் உள்ள விகாரைகளில் தஹம் பாடசாலைகளில் கல்வி கற்கும் சிறார்களுக்கான அறநெறி கல்வியை போதிப்பதற்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாகவும், தேரர்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலின் போது மாவட்ட சாசன பாதுகாப்பு சபை செயலாளர் கரபுடுகல இந்தரதன தேரர் மட்டக்களப்பு மாவட்ட விகாரைகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தலைமை தேரர்கள், உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன், கலாசார உத்தியோகத்தர் எஸ்.தனுஷாந் ஆகியோர் கலந்து கொண்டனர்.




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








