மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப் பத்திரம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்!

மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப் பத்திரம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாண மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன் அடிப்படையில், இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலில், இன்று (18.11.2026) நள்ளிரவு முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி நள்ளிரவு வரை வருமான அனுமதிப் பத்திரம் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் வருமான அனுமதிப்பத்திரம் பெறவிருக்கும் அனைத்து வாகனங்களுக்கும், தண்டப்பணம் எதுவும் வசூலிக்கப்படாமல் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

www.motortraffic.wp.gov.lk என்ற இணையத்தளம் ஊடாக ஒன்லைன் முறையில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் சேவையும் இன்று முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி நள்ளிரவு வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மேல் மாகாண மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் இலத்திரனியல் அமைப்பில் மேற்கொள்ளப்படும் தொழில்நுட்பப் புதுப்பித்தல் காரணமாகவே குறித்த காலப்பகுதியில் இந்தச் சேவை இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects