வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தில் நீண்டகாலமாகப் பணியாற்றி வந்த 136 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்!

வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தில் நீண்டகாலமாகப் பணியாற்றி வந்த 136 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு 23.11.2026 அன்று சுற்றாடல் அமைச்சில் நடைபெற்றது.

தினசரி சம்பள அடிப்படையில் பணியாற்றி வந்த குறித்த ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதில் நீண்டகாலமாகப் பல்வேறு நிர்வாக மற்றும் சட்டரீதியான தடைகள் காணப்பட்டன.

2009ஆம் ஆண்டு முதல் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பணிக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட 279 ஊழியர்களின் சேவையை நிரந்தரமாக்குவது தொடர்பில் எழுந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் சுற்றாடல் அமைச்சும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களமும் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்தன.

இதற்கமைய, குறித்த ஊழியர்களின் சேவையை நிரந்தரமாக்குவதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ள அரச சேவை ஆணைக்குழு உள்ளிட்ட உரிய நிறுவனங்களுடன் கலந்துரையாடல்கள் மற்றும் பல்வேறு நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் முதற்கட்டமாக 136 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான அனுமதி கிடைத்ததையடுத்து, அவர்களுக்கான நியமனங்கள் இன்று வழங்கப்பட்டன.

எஞ்சிய ஊழியர்களின் சேவையை நிரந்தரமாக்குவது தொடர்பில் காணப்படும் நிர்வாக மற்றும் சட்டரீதியான பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, அவர்களுக்கும் நியாயமான தீர்வுகளை வழங்குவதற்கான மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பல ஆண்டுகளாக நாட்டின் வனஜீவராசிகள் வளங்களைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஊழியர்களின் தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், தொழில் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் மனிதவளத்தை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் இந்த நடவடிக்கை முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

இலங்கையின் வனஜீவராசிகள் வளங்கள் மற்றும் உயிரியல் பல்வகைமையைப் பாதுகாப்பதில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் சேவை நிலைமைகளையும் தொழில் பாதுகாப்பையும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects