72 பொது சுகாதார தாதி உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு!

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் உயிரியல் மருத்துவப் பொறியியல் பிரிவின் கேட்போர் கூடத்தில் 31.08.2026 அன்று நடைபெற்ற 72 பொது சுகாதார தாதி உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கலந்துகொண்டார்.

மக்கள் நோயுற்ற பின்னர் சிகிச்சையளிப்பதை விட, நோய்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்கும் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.

புதிதாக நியமனம் பெற்ற 72 பொது சுகாதார தாதி உத்தியோகத்தர்களும் ஆரம்ப சுகாதார பராமரிப்பு அலகுகள் மற்றும் “ஆரோக்கியா” நல்வாழ்வு மையங்களுக்கு இணைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தற்போது நாட்டின் சுகாதார சேவையில் சுமார் 260 பொது சுகாதார தாதி உத்தியோகத்தர்கள் பணியாற்றி வருவதாகவும், அடுத்த கட்டமாக மேலும் 300 பேரை ஆட்சேர்ப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க உள்ளிட்ட சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள், தாதியர் பணிப்பாளர்கள் மற்றும் புதிதாக நியமனம் பெற்ற உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects