கண்டி – மஹியங்கனை – பதியத்தலாவை பிரதான வீதியின் 34 மற்றும் 35ஆவது கிலோமீற்றர் பகுதிகளிலும், மொரகஹமுல்ல – விக்டோரியா வீதியின் 6ஆவது கிலோமீற்றர் பகுதியிலும் நிலையற்ற நிலையில் காணப்படும் வீதிப் பகுதிகளைப் புனரமைக்கும் பணிகள் இன்று (25.11.2026) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் நிறுவப்பட்டுள்ள அனர்த்தப் புனரமைப்பு மற்றும் கிராமிய வீதி அபிவிருத்தித் திட்ட முகாமைத்துவப் பிரிவினால் (PMU) மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், வடிவமைப்புகள் மற்றும் மதிப்பீட்டுப் பட்டியல் (BOQ) தயாரிப்பு ஆகியவற்றின் பின்னர், தேசிய கொள்வனவு நடைமுறையின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட ஒப்பந்த நிறுவனத்திடம் புனரமைப்புப் பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதற்காக ரூ. 625,900,686 பெறுமதியான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதுடன், இத்திட்டத்தை 12 மாதங்களுக்குள் நிறைவுசெய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் உடுதும்பர பிரதேச சபைத் தலைவர் ரவிந்து உஸ்வெட்டகெய்யாவும் கலந்துகொண்டார்.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









