23 மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தாக்கம் – வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

23 மாவட்டங்களுக்குப் பொருந்தும் வகையில் பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதற்கமைய அநுராதபுரம், அம்பாறை, களுத்துறை, கேகாலை, கிளிநொச்சி, குருநாகல், கொழும்பு, கம்பஹா, காலி, திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கும், நுவரெலியா, புத்தளம், பொலன்னறுவை, பதுளை, மட்டக்களப்பு, மன்னார், கண்டி, மாத்தளை, முல்லைத்தீவு, மொனராகலை, யாழ்ப்பாணம், இரத்தினபுரி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கும் இந்த அறிவிப்பு செல்லுபடியாகும்.

குறித்த அறிவிப்பு இன்று (25.11.2026) முற்பகல் 11.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும்.

இதன்படி, குறித்த மாவட்டங்களின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதால், இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அத்திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

(வளிமண்டலவியல் திணைக்களம்)

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects