சுப்பர் நெல் வயல் தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நாளை ஆரம்பம்!

நாட்டின் நெல் உற்பத்தித் திறனை அதிகரித்து, ஒரு ஹெக்டேயருக்கு 10 மெற்றிக் தொன் நெல் விளைச்சலைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை நடைமுறையில் உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ‘சுப்பர் நெல் வயல்’ தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நாளை (26.11.2026) காலை 8.30 மணிக்கு பொலன்னறுவையில் நடைபெறவுள்ளது.

அதன் அடிப்படையில், விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் வழிகாட்டல் மற்றும் எண்ணக்கருவின் அடிப்படையில், விவசாயத் திணைக்களம், மாகாண விவசாயத் திணைக்களங்கள், இலங்கை மகாவலி அதிகாரசபை, பல்கலைக்கழகங்களின் விவசாய பீடங்கள் மற்றும் விவசாயத்துடன் தொடர்புடைய தனியார் நிறுவனங்கள் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுக்கின்றன.

முன்னதாக ஹெக்டயாருக்கு 0.4 மெற்றிக் தொன்னாகக் காணப்பட்ட சராசரி நெல் விளைச்சல், வயல் தொகுதிக் கருத்திட்டம் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை இணைத்துச் செயற்படுத்தியதன் மூலம் தற்போது சுமார் 4.5 மெற்றிக் தொன் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 500 வயல் தொகுதிகளை உள்ளடக்கி ஆரம்பிக்கப்பட்ட ‘500 வயல் தொகுதிகள்’ வேலைத்திட்டத்தின் மூலம் விளைச்சலில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை தரவுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து மேலும் 500 வயல் தொகுதிகளை இணைத்து, மொத்த எண்ணிக்கையை 1,000 ஆக விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது சில வயல் தொகுதிகளில் ஹெக்டயாருக்கு 7.5, 9, 10 மற்றும் 11.2 மெற்றிக் தொன் வரை அதிக விளைச்சல் பதிவாகியுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு, நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 11 வயல் தொகுதிகளை மையமாகக் கொண்டு இந்த ஒருங்கிணைந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

தனியார் துறையின் ஒத்துழைப்புடன் புதிய தலைமுறை உரங்கள் மற்றும் இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள், உற்பத்திச் செலவு தொடர்பான ஆய்வுகள் மற்றும் மண்ணின் போசாக்கை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.கோழி எரு உள்ளிட்ட சேதனப் பொருட்களைப் பயன்படுத்துவதும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

நெல் விளைச்சல் அதிகரிப்புடன், நெல் பயிர்ச்செய்கைக்கு பொருத்தமற்ற, குறைந்த வருமானம் தரக்கூடிய அல்லது சிறுபோகத்தில் நெல் பயிரிட முடியாத காணிகளை அடையாளம் கண்டு, தானியங்கள், பயறு வகைகள், கிழங்கு வகைகள், வெங்காயம் மற்றும் மிளகாய் போன்ற பயிர்களைச் செய்கை செய்யும் மேலதிக பயிர்ச்செய்கைத் திட்டமும் இதனுடன் இணைந்து முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன் மூலம் இறக்குமதிச் செலவைக் குறைத்து, நாட்டின் அந்நியச் செலாவணியைச் சேமிப்பதே எதிர்பார்க்கப்படுகிறது

ஆரம்ப நிகழ்வுக்கு அமைச்சர் தலைமை தாங்கவுள்ளதுடன், விவசாயத்துறையின் உயர் அதிகாரிகள் மற்றும் பிரதேச அரசியல் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects