நாட்டின் 18 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் தாக்கத்திற்கான அதிக சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சல் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி , கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா, புத்தளம் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் அனைத்துப் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அநுராதபுரம், பதுளை, காலி, மன்னார், மாத்தறை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை மேல், சபரகமுவ, மத்திய, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கடற்பகுதிகளில் இடியுடன் கூடிய மழையின் போது மணிக்கு 60–70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடுவதுடன், கடல் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பிராந்திய அடிப்படையில், பெருந்தோட்டப் பகுதிகளில் வறுமை விகிதம் 23 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 17.3 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 7.8 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.
கிராமப்புறங்களிலேயே அதிகளவானோர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்வதாகவும், அந்த எண்ணிக்கை சுமார் 29 இலட்சத்து 30 ஆயிரம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டுக்குப் பின்னர் முன்னெடுக்கப்பட்ட முதலாவது குடும்ப வருமானம் மற்றும் செலவின ஆய்வின் ஆரம்பகட்ட முடிவுகளே இவை எனவும், முழுமையான தரவுகளைச் சரிபார்த்த பின்னர் இறுதி முடிவுகள் வெளியிடப்படும் எனவும் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()










