போரதீவுப்பற்று பிரதேச செயலகமும் போரதீவுப்பற்று கலாசார பேரவையும் இணைந்து நடாத்தும் பிரதேச இலக்கிய விழா நிகழ்வானது 31.12.2023 அன்று வெல்லாவெளி கலாசார மத்திய நிலையத்தில் போரதீவுப்பற்று கலாசார பேரவைத் தலைவரும் பிரதேச செயலாளருமான சோ.ரங்கநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் வி.துலாஞ்சனன், நிருவாக உத்தியோகத்தர் தி.உமாபதி, கலாசார உத்தியோகத்தர் ஆ.பிரபாகரன், கலாசார பிரிவு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட போரதீவுப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
புத்தகக் கண்காட்சிக் கூடம் ஒன்று பிரதேச செயலாளரினால் திறந்து வைக்கப்பட்டதுடன் கலை நிகழ்வுகள் பலவற்றுடன் அறநெறிப்பாடசாலை மாணவ, மாணவிகளால் நீதி நூல் ஒப்புவித்தல் மற்றும் வில்லுப் பாட்டு நிகழ்வுகள் என்பன விழாவில் இடம்பெற்றன.
இறுதியாக பிரதேச இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇