மதகு வழங்கும் ஆரோக்கிய தகவல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

வாழைப்பூவால் ஏற்படும் நன்மைகள்……

வாழைப்பூவில் கல்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட சத்துகள் உள்ளன.

♦ வாழைப்பூவின் முதல் நன்மையாகப் பார்க்கப்படுவது பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறுகளை சரிசெய்யும், வெள்ளைப்படுதல், வயிற்று வலி பிரச்னைகளுக்கு சரியான தீர்வாகும்.

♦ ரத்தத்தில் தேவையில்லாத கொழுப்புகளை சரிசெய்யும். மேலும் ரத்த ஓட்டம் சீராகும்.

♦ வயிற்று வலி உள்ளிட்ட வயிற்றுப் பிரச்சனை உள்ளவர்கள் வாழைப்பூ சாப்பிடலாம்.

♦ உடல் வெப்பநிலையை குறைக்கும் தன்மை கொண்டது.

♦ ரத்த அழுத்தம், ரத்த சோகை உள்ளவர்கள் சாப்பிடலாம்.

♦ நீரிழிவு நோயாளிகளுக்கும் சிறந்த மருந்து என்று சொல்லலாம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.

♦ மூலப் பிரச்னைகளுக்கும் வாழைப்பூ சிறந்த மருந்து.

எப்படி சாப்பிடலாம்,

♦வாழைப்பூவில் உள்ள நரம்பை நீக்கிவிட்டு வாழைப்பூவை நன்றாக வேகவைத்து சாப்பிட வேண்டும்.

♦ உப்பு போட்டு அவித்தோ, பொரியல் செய்தோ, பருப்பு போட்டு கூட்டு செய்தோ சாப்பிடலாம்.

♦ வாழைப்பூவை வேகவைத்து சாறையும் பருகலாம்.

♦ வாரத்திற்கு இருமுறை சாப்பிடலாம்.

இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects