மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளப்பாதிப்பினால் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த மக்களுக்கு கிழக்கு மாகாண சமூக சேவைத்திணைக்களத்தினால் வழங்கப்படும் உலர் உணவுப் பொதிகள் கிழக்கு மாகாண சமுக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் கே. இளங்குமுதநினால் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே. முரளிதரனிடம் (17.01.2024) அன்று மாவட்ட செயலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
இவ்வுலர்உணவுப் பொதிகள் கையளிக்கும் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸ், மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஜதீஸ்குமார், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் எனபலரும் கலந்து கொண்டனர்.
இவ்வருடம் ஜனவரி 1ம் திகதி முதல் பெய்த கனமழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை விட்டு வெளியேறி மாவட்டத்தின் பலபாகங்களிலும் அமைக்கப்பட்டிருந்த நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த சுமார் 353 குடும்பங்களுக்கான உலர்உணவுப் பொதிகள் இதன்போது கையளிக்கப்பட்டது.
ஓவ்வொன்றும் சுமார் 5200 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறித்த பிரதேச செயலகங்களினூடாக சமூக சேவைத்திணைக்களத்தினால் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇