மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி பிரதேசத்தில் சமூக அபிவிருத்தி திணைக்களத்தினால் பிரதேச செயலாளர் எஸ் எச். முசமில் தலைமையில் சமூக சேவை உத்தியோகத்தர் ஏ எம். நஜிம் ஒழுங்கமைப்பில் வட்டியில்லா கடன் பயனாளிகளுக்கு வாங்கும் நிகழ்வு (19.01.2024) அன்று இடம்பெற்றது
இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் ரமிசா மற்றும் கணக்காளர் எ. மோகனக்குமார், திட்டமிடல் பிரதி பணிப்பாளர் எச் எம். புவைத் , உத்தியோகத்தர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது 10 பயனாளிகளுக்கு நாங்கு லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கிவைக்கப்பட்டிருந்தது.
பிரதம அதிதியாக கலந்து கொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே ஜே முரளிதரன் பயனாளிகளுக்கு நிதியினை வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇